முகமூடி அணிந்து 100 க்கும் அதிகமான பெண்களை கடத்தி கற்பழித்த காமகொடூரன்


முகமூடி அணிந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்ந்த காமக்கொடூரனை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த வேல்ரி மெக்ரன்கோவ். 67 வயதாகும் இந்நபரை கடந்த மாதம் மாஸ்கோ காவல்துறையினர் கைது செய்தனர். மாஸ்கோ காவல்துறையினரிடம் சிக்காமல் கடந்த 27 ஆண்டுகளாக 100 க்கும் அதிகமான பெண்களைச் சீரழித்துள்ளான்.

பெண்களைக் கடத்தி வன்புணரும்போது தம்மை அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்திருந்த இந்நபர், பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அப்பெண்கள் அணிந்திருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளான்.

கடந்த மாதம் 29 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அப்பெண் இவனுடைய முகமூடியை இழுத்து மாற்றி அடையாளம் கண்டுகொண்டதோடு, உடனடியாக காவல்துறையினரிடமும் அடையாளம் காட்டிவிட்டார். தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டான்.

இவனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம் பிறந்தநாளன்று பெண்களை வன்புணர்வு செய்வதை விருப்பமாக செய்து வந்துள்ளது தெரிய வந்தது. தம் பிறந்தநாள் பரிசாக தம்மைப் பெண்களுக்கு அற்பணித்ததாக தாம் செய்த செயலை நியாயப்படுத்தியுள்ளான். இவன்மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"