ஐந்து வருடங்களாக 91 வயது முதிய பெண்ணுடன் டேட்டிங் செய்யும் 31 வயது வாலிபர்


அமெரிக்காவில் Pittsburgh என்ற நகரை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் தன்னைவிட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள அதாவது 91 வயதுள்ள ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்று கொண்டிருக்கிறார். இதற்கு அந்த நபரின் தாயாரும் அனுமதி கொடுத்துள்ளார் என்பதுதான் புதுமை.

60Pittsburgh நகரை சேர்ந்த Kyle Jones, என்ரா கால்செண்டரில் பணிபுரியும் நபர் அடிக்கடி பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் இவர் டேட்டிங் செய்யும் பெண்கள் எல்லோருமே 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 50 வயது தாயாரும் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை.

இந்நிலையில் Marjorie McCool என்ற 91 வயது முதிய பெண்ணை தற்செயலாக நூலகத்தில் பார்த்த Kyle Jones,தன்னுடன் டேட்டிங் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லவே இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாகவே இருந்து வருகிறார்களாம். 60 வயது வித்தியாசம் தனக்கு பெரிதாக தெரியவில்லை என்றும், அவருடன் இருப்பதில் செக்ஸ் உள்பட தனக்கு அனைத்து விதத்திலும் திருப்திகரமாக உள்ளது என்று Kyle Jones, கூறியுள்ளார்.

Marjorie McCool என்ற்91 வயது பெண், ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Kyle Jones என்ற 31 வயது வாலிபருடனும், அவருடைய தாயாருடனும், ஒரேவீட்டில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபூர்வ ஜோடி வெளியே வரும்போது அனைவரும் ஆச்சரியத்து பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"