குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை கொள்ளையர்கள் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம்


உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஷாஹித் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர்.

அதன் பின்னர் ஷாஹித்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக கற்பழித்தனர்.

ஷாஹித்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"