முகமூடி அணிந்து மனைவியையே பலாத்காரம் செய்த வினோத சம்பவம்


முகமூடி அணிந்து கொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த திருடன் ஒருவன் வீட்டினுள் நுழைந்தான்.

அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த பணமும் கொடுத்துள்ளார் யென். பின்னர் முகமூடியுடன் யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றையெல்லாம் தனது கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

விசாரணையின் போது யென்னின் கணவனில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்து பாலியல் பலாத்காரம் செய்தது யென்னின் கணவன்தான் என்பது தெரியவந்துள்ளது. 36 வயதான யென்னின் கணவன் ஷாஓ (34வயது) குற்றத்தை பொலிஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது மனைவி தொலைபேசியில் மற்ற ஆண்களுடன் ஆபாசமான தொடர்பு கொண்டுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்தேன். இதனால் அவளை அச்சுறுத்தவே இவ்வாறு செய்தேன் என ஷாஓ பொலிஸாரிடம் கூறியுள்ளார். இருப்பினும் தன் மீது பொறாமை கொண்ட கணவனை மன்னித்து ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார் ஷாஓ. இதேவேளை ஷாஓ மீது பாலியல் பலாத்காரம் மற்றும் திருட்டு குற்றப் பதிவு செய்ய ஆலோசிப்பதாகக் கூறப்படுகின்றது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"