அண்ணனுடன் தங்கை காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை!


அண்ணன் உறவுமுறை கொண்டவருடன் மகள் காதல் வயப்பட்டதால் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி போதுமணி(வயது 45). இவர்களுடைய மகள் அழகுமணி (வயது 23). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அழகுமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் உறவுமுறை கொண்ட இளையராஜா (வயது 27) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.

இந்த விஷயம் ஊருக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும். எனவே காதலை கைவிட்டு விடுங்கள் என்று குடும்பத்தினர் எச்சரித்தனர். எனினும் அதனை கண்டுகொள்ளாமல் அவர்கள் காதலித்து வந்தனர்.

தங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதால் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தனர். அதன்படி சம்பவத்தன்று இளையராஜாவும், அழகுமணியும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.

அவமானம் தாங்காமல் அழகுமணியின் தாய் போதுமணி அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓடைப்பட்டி காவல்துறையினர், போதுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"