CV vs RESUME vs BIO DATA மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!


பயோ-டேட்டா (BIO-DATA)
* ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா!
* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள்.
* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான்.

ரெஸ்யூம் (RESUME)
* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.
* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம்.
* இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும்.

CV (CURRICULUM VITAE),
* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும்.

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"