விமான இருக்கைகளின் நிறங்களில் இவ்வளவு விசயங்களா !!

http://denaldrobert.blogspot.com/

விமான பயணங்கள் ஒருவருக்கு மிகவும் அலாதியான உணர்வை தரக்கூடியவை. எனவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. நீங்கள் விமானத்தில் பல முறை பயணம் செய்தவர் என்றால், ஒரு விஷயத்தை உங்களால் கவனித்திருக்க முடியும்.

பெரும்பாலான விமானங்களின் இருக்கை நீல நிறத்தில்தான் இருக்கும். உலகில் செயல்படும் ஏறக்குறைய அனைத்து விமான நிறுவனங்களும் நீல நிற இருக்கைகளைதான் பயணிகளுக்கு வழங்குகின்றன. அது ஏன் என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? இந்த சந்தேகம் இருக்கும்பட்சத்தில், உங்களுக்குதான் இந்த செய்தி.

பொதுவாக நீல நிறம் வானத்தை குறிக்கிறது என்பதால், விமான நிறுவனங்கள் ப்ளூ கலரை தேர்வு செய்யலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் பல்வேறு பகுத்தறிவான காரணங்களும் இருக்கின்றன.

பொதுவாக விமானங்களில் பயணம் செய்வது என்றாலே ஒரு சிலருக்கு இனம் புரியாத பயம் வந்து விடும். அதுவும் முதல் முறை பயணம் செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களின் பயத்தை போக்குவது சிரமமான காரியமாக இருக்கும். இதனை ஏரோபோபியா என குறிப்பிடுகின்றனர். ஏரோபோபியா என்றால், விமானத்தில் பறப்பதற்கு உண்டாகும் பயம் என அர்த்தமில்லை.

பொதுவாக பறப்பதற்கு உண்டாகும் பயம்தான் ஏரோபோபியா. அதாவது ஹெலிகாப்டர் மற்றும் மற்ற அனைத்து பறக்கும் வாகனங்களில் பயணம் செய்வதற்கு ஒருவருக்கு பயம் இருந்தால், அவர் ஏரோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என அர்த்தம். அனைத்து பறக்கும் வாகனங்கள் என்பதால், இதில் விமானங்களும் அடங்குகின்றன.

விமானங்களில் பயணம் செய்பவர்களின் பயத்தை போக்குவதற்காகவும் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நீல நிறம் நமது மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை.

ஏரோபோபியாவை எதிர்த்து போரிட பயணிகளுக்கு இது உதவி செய்யும். எனவேதான் விமான நிறுவனங்கள் நீல நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் இது ஒரு காரணம் மட்டும்தான். நீல நிற இருக்கைகளுக்கு பின்னால் இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் நீல நிறத்தை பயன்படுத்துகின்றன.

வெள்ளை போன்ற நிறங்களுடன் ஒப்பிடும்போது, நீல நிற இருக்கைகளில் அழுக்கு மற்றும் உணவு கறைகள் அவ்வளவாக தெரியாது. எனவே அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் அடிக்கடி மாற்றுவது போன்ற தேவைகள் இருக்காது என்பதால், ஓரளவிற்கு பணத்தை விமான நிறுவனங்களால் சேமிக்க முடியும். இதன் காரணமாகவும் நீல நிற இருக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதுதவிர விமானத்தில் பயணிகளுக்கு இடையே மோதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காகவும் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்களில் பயணிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் தொடர்ச்சியாக அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்களின் அனுபவத்தை கேட்டு பாருங்கள்.

அவர்களுக்கு விமானத்தில் பயணித்து பயணித்து அலுப்பு தட்டியிருக்கும். அத்துடன் விமான பயணங்கள் ஒரு சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியவை என்பதையும் மறுத்து விட முடியாது. ஒரு சில சமயங்களில் உங்களுக்கு விமானத்தில் மிகவும் மோசமான அனுபவங்கள் உண்டாகலாம். விமானங்களில் பயணம் செய்யும்போது பல்வேறு விதிமுறைகள் இருக்கும்.

அத்துடன் இருக்கைகளில் உங்களுக்கு போதிய அளவிற்கு இடவசதி கிடைக்காமல் போகலாம். யார் என்றே தெரியாத ஒருவரின் தோள் பட்டையை இடித்து கொண்டே நீங்கள் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம். எனவே இருக்கைகளின் நிறத்தின் உதவியுடன் முடிந்தவரை அனைத்து பயணிகளையும் அமைதியாக வைத்திருக்க விமான நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

அதற்கும், நீல நிறத்திற்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையில் சம்பந்தம் இருக்கவே செய்கிறது. இதற்கு அறிவியல் ரீதியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒருவரை அமைதிப்படுத்தக்கூடிய ரசாயனங்களை நீல நிறம் உடலில் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டு கொள்வதற்கான வாய்ப்புகள் குறையும்.

அத்துடன் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். ப்ளூ கலர் அமைதியை குறிக்கிறது என கலர் சைக்காலஜி வல்லுனர்கள் கூறுகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அனைத்து நேரங்களிலும் விமான நிறுவனங்கள் நீல நிறத்தைதான் தேர்வு செய்துள்ளனவா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.

கடந்த 1970 மற்றும் 1980களில் ஒரு சில விமான நிறுவனங்கள் சிகப்பு நிறத்தை தேர்வு செய்தன. ஆனால் நீல நிறத்திற்கு மாறும் சூழல் உடனடியாகவே அந்த விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் சிகப்பு நிறம் பயணிகளுக்கு இடையே ஆக்ரோஷத்தை தூண்டும் வகையில் இருந்தது. எனவேதான் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்ப்பதற்காக விமான நிறுவனங்கள் நீல நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"