மணி பேக் பாலிசி vs என்டோமென்ட் பாலிசி

https://denaldrobert.blogspot.com/

பாலிசி கால முதிர்வு அல்லது இறப்பின் போது பாலிசி முடிவுறும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும், என்டோமென்ட் மற்றும் மணி பேக் திட்டம் ஆகிய இரண்டுமே வைத்திருக்கின்றன. பாலிசிதாரர் உயிரோடு இருந்து பாலிசி காலம் முதிர்ச்சி அடைந்துவிட்டால், அவரே பாலிசி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவருடைய நாமினி அந்த பணத்தைப் பெறுவார்.

யுஎல்ஐபியைப் போல் அல்லாமல் என்டோமென்ட் திட்டமும், மணி பேக் திட்டமும் சந்தையைச் சார்ந்து இருப்பதில்லை. அதனால் இந்த திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது. பாலிசி கால முதிர்வு அல்லது பாலிசிதாரர் இறப்பு ஆகிய இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது முதலீடு செய்த பணம் கைகளுக்கு வந்துவிடும். எனவே இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் திரும்ப கிடைக்கும் என்று உத்திரவாதம் வழங்கலாம்.

என்டோமென்ட் திட்டம் மற்றும் மணி பேக் திட்டம் ஆகிய இவற்றிற்கிடையே இருக்கும் மிக முக்கிய வேறுபாடு பணத்தைத் திருப்பி வழங்கும் காலமாகும். என்டோமென்ட் திட்டத்தில் பாலிசி காலம் முடிந்த பின்பு அல்லது பாலிசிதாரர் இறந்த பின்பு பணம் திருப்பித் தரப்படும். ஆனால் மணி பேக் திட்டத்தில் அவ்வாறு இல்லாமல் பாலிசியில் குறிப்பிட்டுள்ளவாறு பாலிசி காலம் முதிர்வு பெறும் வரை ஒரு சீரான இடைவெளியில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக ஒரு பாலிசிதாரர், மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் 3 வருடங்கள் கழித்து 10 சதவீத பணத்தைத் திரும்பப் பெறுவார். 6 வருடங்கள் கழித்து 15 சதவீத பணத்தைப் பெறுவார். இவ்வாறு அவருக்கு சீரான இடைவெளியில் பணம் திருப்பி வழங்கப்படும்.

லோன் பெறுவதற்கு என்டோமென்ட் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் மணி பேக் திட்டத்தை அதற்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் ஒரு சீரான இடைவெளியில் குறைந்து கொண்டே இருக்கும்.

பணத்தை சேமிக்க மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு என்டோமென்ட் பாலிசி ஒரு மிகச் சிறந்த கருவியாக இருக்கும். அதாவது பணத்தை சேமிக்க கஷ்டப்படும் ஒருவர் ஒரு வங்கியில் கணக்கு துவங்கி, தனது கணக்கில் கணிசமான பண இருப்பை வைத்திருப்பது அவருக்கு இயலாத காரியமாகும். அப்படிப்பட்டவர் இந்த என்டோமென்ட் திட்டத்தில் முதலீடு செய்து சேமிப்பதன் மூலம் தனது வாழ்க்கையின் முக்கிய காலங்களான தனது மகன் அல்லது மகளின் திருமணம் மற்றும் தனது ஓய்வு காலம் ஆகிய காலங்களில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடியும். இந்த திட்டத்தில் அவர் மிக எளிதாக சேமிக்க முடியும்.

மணி பேக் திட்டம், ஒரு சீரான இடைவெளியில் பணம் வேண்டும் என்று விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் தனது குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம், உயர்கல்விக்கான தேர்வு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் இந்த மணி பேக் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலம் கழித்து ஒரு பெரிய தொகையைப் பெற வேண்டும் என்றால் என்டோமென்ட் பாலிசியில் முதலீடு செய்யலாம்.

சீராக பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மணி பேக் திட்டத்தில் சேரலாம். ஆனால் பாலிசியில் சேர்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் நெறிமுறைகளைத் தெரிந்து மற்றும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே சேர வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான லாபத்தைப் பெற முடியும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"