டவுண்லோட் செய்த பைல் எங்கே?
Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும் அல்லது Ctrl+J அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும்.
இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும்.
அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால் பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் மெனு பாரில் Fontsதேர்ந்தெடுத்து அதில் Effectsபிரிவைக் கிளிக் செய்திடுக.
புதிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
அதில் Hiddenஎன்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Unto+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
டாஸ்க் பார்/டூல் பார்
டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது.
இதன் கலரை மாற்றலாம்.
இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம்.
இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம்.
நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது.
ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால்,அவை அனைத்தும் புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும்.எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம்.புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால் புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
இந்த பாரின் இறுதியில் வலது பக்கம் சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம்.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும்.பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம்.தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம்.வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த
கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது.கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது.
உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா?
ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா?
உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள்.சிடி இயங்காது நின்றுவிடும்.
ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.