ஃபேஸ்புக்கில் தகவல்களை யாருடன் பரிமாறலாம்


உங்கள் கணக்கு பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள் என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்து வரும் விண்டோவில் Connecting On Facebook பகுதியில் உள்ள View Setting என்பதை க்ளிக் பண்ணுங்க.இதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் பட்டியலை பார்க்க என்ற பகுதியில் அதில் உள்ள Customize என்பதை க்ளிக் செய்யுங்கள்.இதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.


நண்பர்களின் நண்பர்கள்:
இதனை தேர்வு செய்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்ட் உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாது அவரின் நண்பர்களுக்கும் தெரியும்.

நண்பர்கள் :
இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும்.

நான் மட்டும்:
இந்த வசதியை தேர்வு செய்தால் உங்களை தவிர வேறு எவரும் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் பகுதியை காண இயலாது.

குறிப்பிட்ட நபர்கள்:
இந்த வசதியானது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை காண்பிக்கலாம்.இதை தேர்வு செய்து வரும் கட்டத்தில் அவர்களின் பேரை குறிப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் நாம் காண்பிக்கலாம்.

இந்த விண்ணப்பத்தை மறைக்கவும்:
நீங்கள் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை மறைக்க விரும்பும் நபர்களை தனித்தனியே தேர்வு செய்து கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"