அழிக்க முடியாத கோப்புக்களை உருவாக்குவது எப்படி?


இதனை மென்பொருட்கள் இல்லாமல் நம்முடைய கணினியிலேயே செய்யலாம்.

DOS-Command Prompt ஐ திறந்து (Start;Run; (type) 'cmd') என தட்டச்சு செய்யுங்கள்.

பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தேர்வு செய்து Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.
கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்போது கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தேர்வு (C: or D:) செய்த இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இப்போது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள்.கீழே உள்ளவாறு தகவல் வரும்.


அந்த கோப்பை அழிக்க வேண்டுமெனில் மீண்டும்
DOS-Command Prompt ஐ திறந்து (Start;Run; (type) 'cmd') என தட்டச்சு செய்யுங்கள்.
பின்னர் Command Prompt இல் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.இப்போது அந்த கோப்பினை நீக்க முடியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"