உங்களைப்பற்றிய தகவலை இணையத்தில் தேட..


இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும்.பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை,வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுள்  திரட்டித்தரலாம்.

அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம்,பாதகமானவையும் இருக்கலாம்.உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம்.உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும்.அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.

இந்த தளம் கூகுளில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப் பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம்.நீங்கள் பணியாற்றும் இடம் ,உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம்.
அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும்.

இணையதள முகவரி : http://vizibility.com/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"