கோப்புகளை மறைக்க, பாதுகாக்க .....


இந்த Folder Protector மென்பொருளானது ஒரு Folderஇல் அல்லது ஒரு Drive இல் இருக்கும் Fileகளை மிகவும் இலகுவாக Hide செய்வதோடு அவற்றை வேறு எந்த மென்பொருட்களாலும் கண்டுபிடிக்க முடியாமலும் செய்கிறது.

இந்த Lock Drive மென்பொருளை நீங்கள் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை, இது Portable வகையைச் சேர்ந்த ஒரு மெண்பொருளாகும். கணனியிலுள்ள தரவுகளை மட்டுமல்லாது Pen Drive, வேறு Network Placeகளில் உள்ள Fileகள் , External Hard Driveகளில் உள்ள Fileகள் என்பவற்றையும் இதன் மூலம் பாதுகாக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது இந்த Folder Protector மென்பொருளை தேவையான Folderஇல் அல்லது Driveஇல் Paste செய்து அதனை Open செய்வது தான், அப்போது உங்களுக்கு விரும்பிய Password ஒன்றைக் கொடுத்து Protect என்பதை Click செய்ததும் உங்கள் Fileகள் மாயமாய் மறைந்துவிடும்.

மீன்டும் Fileகள் தேவைப்படின் குறித்த Folderஇல் உள்ள Folder Protector மென்பொருளை மீண்டும் Open செய்து ஏற்கெனவே கொடுத்த Passwordஐ கொடுத்ததும் குறித்த Fileகளை மீண்டும் காட்டும்.

அதேவேளை Password ஒன்றைக் கொடுத்து Protect செய்த பின்னர் நீங்கள் விரும்பினால் Folderஇல் உள்ள Folder Protector மென்பொருளை அழித்து விடலாம். அப்போது எவராலும் அதனை கண்டுபிடிக்க முடியாமல் போவதோடு, அந்த Folderஐ உங்களைத் தவிர யாராலும் அழிக்கவும் முடியாது என்பது அதைவிடவும் சிறந்த செய்தி. மேலும் இவ்வாறு Protect செய்த Fileகளை DOS முறையிலும் கண்டுபிடிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"