Pen Drive களை பாதுகாப்பாக அகற்ற…


சில வேளை நாம் வழமையான முறையில் Pen Driveஐ Remove செய்யும் போது அது Remove ஆக மறுக்கும், சில Programe Run ஆவதாகச் சொல்லும். இருந்த போதிலும் அவற்றை சரியாக கண்டறிய முடியாதிருக்கும். எனவே நாம் அந்த எச்சரிக்கைகளை மீறி Pen Driveஐ அகற்றுவோம். இதன் போது உங்கள் Pen Drive செயல் இழந்துவிட வாய்ப்பு இருக்கின்றது, அத்தோடு Pen Drive இல் உள்ள உங்கள் File கள் அழிந்துவிட அல்லது பாதிப்பட (Cropped) ஆகிவிட வாய்ப்புள்ளது.

உங்கள் கணனியில் USB Safely Remove மென்பொருள் இருந்தால் இந்த சிக்கல்களில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இந்த USB Safely Remove மூலம் உங்கள் Pen Drive மட்டுமல்லாது அனைத்து USB சாதனங்களையும் முறையாகக் கையாள முடிகிறது.

USB Safely Remove மென்பொருள் மூலம் மிக இலகுவாக USB சாதனத்தை நிறுத்துவதோடு என்னென்ன Programe கள் Run ஆகின்றன என்பதையும் காட்டுகிறது. அப்போது அவற்றை முறைப்படி Close செய்துவிட முடியும், சில வேளை ஏதாவது நமது Pen Drive இலிருந்த Run ஆகிக்கொண்டிருந்தால் அவற்றை பலவந்தமாக நிறுத்தவும் முடியும். இவற்றுக்கு மேலதிகமாக USB Modem, USC CD Drive போன்றவற்றினையும் இதன் மூலம் முறைப்படி அகற்ற முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்..





பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"