புதிய Microsoft Office இன் தொகுப்பில் செய்த கோப்புகளை பழையதில் எப்படி திறப்பது ?

Microsoft Office இன் பழைய தொகுப்புகளை பாவிப்பவர்கள் அடிக்கடி எதிர் கொள்ளும் ஒரு பிரச்சினை இந்த Version பிரச்சினை. அதாவது, புதிய Ms Office பதிப்புகளான Office 2007 அல்லது Office 2010 போன்ற வற்றில் செய்து Save செய்து கொண்டு வந்த நமது Document எமது கணனியில் உள்ள Ms Office தொகுப்பில் திறக்க முடியாது போகும்.

இதற்குக் கரணம் என்னவென்றால் Microsoft இன் புதிய Office தொகுப்புகளான Office 2007 மற்றும் Office 2010 ஆகியவற்றின் Default File Format ஆனது முன்னைய Office பதிப்புகளில் இருந்தை விட வேறுபட்டிருப்பதாகும். (முன்னைய் Ms Word இன் Default File Format ஆனது .doc என இருந்தாலும் புதிய பதிப்பில் .docx எனும் புதிய வடிவில் கானப்படுகிறது.) இருந்தபோதிலும் புதிய Ms Office பதிப்புகளில் பழைய Format இல் Save செய்து கொள்ளக்கூடிய வசதியும் கனப்படுகிறது. இவ்வசதி இருந்த போதிலும் சில வேலைகளில் Default File Format இல் நாம் Save செய்து விடுகிறோம். அதனை பழைய பதிப்புள்ள ஒரு கணனியில் Open செய்யும் போது பிரச்சினை.

ஆனால் இனிமேல் அந்தப் பிரச்சினையும் ஏற்படது. ஏனென்றால் பழைய Office தொகுப்பை இன்னும் பாவிக்கக்கூடிய தமது வாடிக்கையாளர்களுக்கு Microsoft நிறுவனம் இந்த File Format சிக்கலுக்கு தீர்வாக File Format Convertor எனும் Patch தொகுப்பை இலவசமாகவே வழங்குகிறது. இந்த File Format Convertor உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருந்தால் Ms Word, Ms Excel, Ms Powerpoint போன்ற பதிப்புகளில் ஏற்படகூடிய File Format சிக்கல் நீங்கிவிடும்.

இதில் இன்னொரு விஷயம் யாதெனில் புதிய Ms Office தொகுப்பில் கானப்படும் சில புதிய Formatting Options இந்த Convertor மூலம் பழைய பதிப்பில் திறக்கும் போது மாற்றமடைய இடமுண்டு.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"