செல்பேசியிலிருந்து நேரடியாக வீடியோ ஒளிபரப்பு செய்ய..


கேமரா வசதியுடைய செல்பேசியிலிருந்து உங்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்ய bambuser என்ற இணையதளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று பயனர் கணக்கை தொடங்க வேண்டும் அல்லது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கின் மூலமாகவும் உள்ளே நுழையலாம்.

முதலில் செல்பேசிக்குறிய மென்பொருளை உங்கள் செல்பேசியில் இன்ஸ்டால் செய்யவும்.பிறகு நிறுவப்பட்ட மென்பொருளை திறந்து ஒளிபரப்பை ஆரம்பிக்கலாம்.

செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு இருந்தால் நம் வீடு மற்றும் பொது நிகழ்ச்சிகளை நம் செல்பேசியிலிருந்தே உலகம் முழுவதும் நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம்.

கணினி வெப் கேமராவிலிலிருந்தும் ஒளிபரப்பு செய்யலாம். உங்கள் ஒளிபரப்பினை உங்கள் ப்ளாக்கிலோ அல்லது இணையப்பக்கத்திலோ கேட்ஜெட்டாகவும் பொருத்தி உலகம் முழுவதும் ஒளிபரப்பி உங்கள் நண்பர்களையும் காண வழி செய்யலாம் என்பது கூடுதல் வசதி.

இணயதள முகவரி : http://bambuser.com/


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"