போர்டபிள் மென்பொருட்கள் இலவசமாக..


போர்டபிள் மென்பொருள் என்றால் அந்த மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் நிறுவாது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து கொள்ளாது. உங்கள் கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

இவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும் நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள் உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.

இவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.

ஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு.

பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல் மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன. வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே தரவிறக்க  இங்கே சொடுக்குங்க.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"