UNCHROME மென்பொருள்

 தற்போதைய பிரவுசர்களில், குரோம் பிரவுசர், அதிவேக பிரவுசர் தான். பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் இது பெற்றிருக்கிறது என்பதும் உண்மையே. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளின் விளைவினால்,இந்த CHROME பிரவுசர், நம்மைப் பற்றிய பல பெர்சனல் தகவல்களையும் பெற்று, சேமித்து கொள்ளுமோ - அப்படி சேமித்து கொண்டதை, கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்ற சந்தேகம் ஏற்பட்டதனாலேயே இந்த UNCHROME புரோகிராம் எழுதப்பட்டிருக்கிறது என இதனை வடிவமைத்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கூகுள், தனது வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ள அடையாள எண் மூலம் அந்த வாடிக்கையாளர் யார் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்கிறது. இந்த UNCHROME புரோகிராமைப் பயன்படுத்தும் போது கூகுளின் வாடிக்கையாளரின் அடையாள எண்ணை அழித்துவிடுகிறது. இதனால் நம்முடைய பெர்சனல் தகவல்கள் கூகுள் நிறுவனத்திற்குக் கிடைக்காமல் போய்விடுவதாக UNCHROME -ஐ அமைத்தவர்கள் கூறுகின்றனர்.

இதுப்போன்ற சந்தேகம் நம்மில் யாருக்கேனும் ஏற்பட்டு கூகுளில் உள்ள அடையாள எண்ணை நீக்க வேண்டுமெனில் கீழ்க்காணும் முறையில் செயல்படலாம்.

UNCHROME சாப்ட்வேர் தொகுப்பை டவுண்லோட் செய்யவும்.

டவுண்லோட் - செய்ததை அப்படியே கூட இயக்கலாம் அல்லது சேவ் செய்தும் வைத்து இயக்கலாம்.

இயக்கத் தொடங்குகையில் ஒரு ஸ்கிரீன் வரும்.அந்த ஸ்க்ரீனில் REMOVE UNIQUE ID NOW என்ற இடத்தில் கிளிக் செய்து, பிறகு ஓகே கொடுத்து வெளியேறவும். இந்த செயல்களுக்கு முன்பாக குரோம் பிரவுசர் மூடப் பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

இனி குரோம் பிரவுசரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.அப்பிரவுசரால் உங்களை அடையாளம் காண முடியாமல் போய் விடும் என்று இந்த UNCHROME தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"