இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம்


இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடிய‌ந்திர‌த்தின் நோக்க‌ம்.ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.

இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது ப‌டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.
என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்.இது போன்ற‌ த‌னி தேடிய‌ந்திர‌ம் அவ‌சிய‌மா என‌ சில‌ர் நினைக்க‌லாம்.அவ‌ர‌வ‌ர் தேவை ம‌ற்றும் ம‌ன‌நிலையை பொருத்த‌து இது. சிறுவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌டிகட்டும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ ஒருவ‌ரின் உண‌ர்வு சார்ந்த‌ வ‌டிக‌ட்ட‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ச‌ரியே.இப்ப‌டி ஆபாச‌ ப‌ட‌ங்க‌ள் வடிகட்டப்பட்டு தேவையான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றுவ‌து ந‌ல்லது தானே.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"