புதிய கணினி விளையாட்டு பற்றிய தகவல்கள்


நாளுக்கு நாள் புதிது புதிதாக விளையாட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து புது விளையாட்டுகளையும்
அதைப்பற்றிய விரிவான தகவல்களையும் வீடியோவுடன் இந்த தளம் தருகிறது.

விளையாட்டு குழந்தைகளை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் தற்போது ஈர்த்து வருகிறது. முப்பரிமானம்(3D)-யில் உருவாக்கப்படும்
விளையாட்டுக்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு மக்களையும் கவர்கிறது. தினமும் பல புதிய விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் இந்ததளத்திற்கு சென்று நாம் புதிதாக வந்திருக்கும் விளையாட்டைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

புதிய விளையாட்டின் டிரைலர் மட்டுமல்ல அந்த விளையாட்டின் சிறப்பு வீடியோவையும் பார்க்கலாம். இது மட்டுமின்றி எந்த விளையாட்டு நிறுவனம் இப்போது போட்டி அறிவித்திருக்கிறது என்று தெரிந்து நேரடியாக போட்டியில் ஆன்லைன் மூலம் பங்கு பெறலாம்.

இந்ததளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி விளையாட்டு பற்றிய பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"