சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக


உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப்பற்றி பற்றியும் அவரது திரைப்படங்கள் மற்றும் பொது வாழ்வைப் பற்றியும் மிகைப்படுத்தப்படாத உண்மையான செய்திகளை அறிய விரும்பும் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களின் சேவைக்காக தொடங்கப்பட்ட வலைத்தளமே OnlySuperstar

தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் கிராஃபிக் டிசைனராகப் பணிபுரியும் சுந்தர் என்னும் ரசிகரின் முயற்சியால் உருவாக்கப்பட்டு அவருடைய மற்றும் சக நண்பர்களின் ஈடுபாட்டால் இயங்கும் இத்தளம் அனைத்து இணைய தள ரஜினி ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளது. (இணையதள ரஜினி ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான சுந்தர் இதற்க்கு முன்பு கடந்த பல ஆண்டுகளாக ரஜினி பற்றிய தளங்களில் ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை, கட்டுரைகளை, திரைப்படத்தின் Box office Records உள்ளிட்டவைகளை தந்திருக்கிறார். யாஹூ குரூப் ரசிகர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சுந்தர் பரிச்சயமானவர். ஊடகத்துடன் (MEDIA) நல்ல நட்புறவு கொண்டிருக்கும் இந்த தளம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் வெளியாகும் பல நல்ல செய்திகளுக்கு ஊற்றாக திகழ்ந்து வருகிறது.)

இந்த தளம் விரைவில் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்த வலைத்தளம், முற்றிலும் இலவசமான, வர்த்தக நோக்கம் இல்லாத முயற்சி ஆகும்.

இந்த தளத்திற்கான செய்திகளை சேகரிப்பது, புகைப்படங்களை பெறுவது மற்றும் எழுதுவது முழுக்க முழுக்க சுந்தர் என்கிற தனி நபராலே மட்டுமே செய்யப்படுகிறது. இந்த வெப் சைட்டிற்கான பராமரிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளும் சுந்தர் மற்றும் அவரின் ஒரு சிறு நண்பர் குழாம் மூலமே மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்த விதமான விளம்பரங்களோ அல்லது வியாபார நோக்கமோ இல்லாமல், இணைய தள ரஜினி ரசிகர்களின் சேவைக்காக மட்டுமே முழு மனதுடன் நடத்தப்படுவதால், உலகம் முழுவதிலுமிருந்து தினமும் பல ஆயிரம் வருகையாளர்களுடன் மாபெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

எல்லா நேரங்களிலும் நேர்மையான கருத்துக்களை பக்குவமாக வெளியிடும் இந்த வலைத்தளம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப் பற்றிய சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி பரபரப்பு ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் உண்மையான தகவல்களை வெளியிடவும், ரசிகர்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமான முறையில் பரிமாறிக்கொள்ளவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

முதலில் இந்த தளம் Onlyrajini என்ற பெயரில் தான் துவக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக Onlysuperstar என்று பெயர் மாற்றப்பட்டு பின்னர் அந்த பெயரிலேயே தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. (வெப்சைட் துவக்கத்திற்கு முன்னர் ப்ளாக்ஸ்பாட்டில் நாம் வெளியிட்ட பதிவுகளை பார்க்க விரும்புபவர்கள் Onlysuperstar.blogspot.com என்ற முகவரிக்கு சென்று பார்க்கலாம்.)

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"