இணையத்தில் ஆபாச விடயங்களை தேடுபவரா நீங்கள்?


‘காமசூத்ரா பாடம்’ என்ற தலைப்பில் பவர் பொயிண்ட் கோப்பு ஒன்று தற்போது இணையத்தில் உலாவருகின்றது. ஆவலுடன் அதனை தரவிறக்கம் செய்தால் காத்திருக்கின்றது உங்களுக்கு ஆபத்து.

ஆம்,

இதனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் “Troj/Bckdr-RFM” என்ற வைரஸ் உங்கள் கணனிகளில் தானாக தரவிறங்கிக் கொள்ளும்.

நீங்கள் காம சூத்ரா பாடத்தில் இலயித்திருக்கும் போது உங்கள் கணனி தானாக ஆபத்தில் சிக்கியிருக்கும். பின்னர் உங்கள் அடையாளங்கள் மற்றும் இரகசியங்கள் யாரோ ஒரு இணையத்திருடனிடம் சிக்குண்டிருக்கும். எனவே இத்தகையவற்றிடம் கவனமாக இருங்கள் ! கண்டவற்றிக்காக பெறுமதி வாய்ந்தவற்றை இழக்க வேண்டாம் !

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"