DLL பிரச்சினைக்கு தீர்வு காண..


Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ் இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி எதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும் மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும் பிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம் விண்டோஸ் மறுபடியும் நிறுவத் தேவையில்லை. எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL கோப்பை தரவிறக்க இந்த தளம் உதவுகிறது.

இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி வருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல் இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக தரவிறக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி
நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"