மொபைல்களுக்கான அதி வேக உலவி பினு



இதன் முக்கியமான அம்சம் இதன் அசுர வேகம் தான். இதில் மற்ற உலவிகள் போல் நம்முடைய இணையமுகவரியை தரமுடியாது. ஆனால் நமக்கு பொதுவாக தேவைப்படும் அனைத்தும் இதில் முன்கூட்டியே தரப்பட்டிருக்கும். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் நாம் ஊரின் காலநிலையை அறியவும் இதில் வசதி உள்ளது. இது மற்றவற்றை விட பத்துமடங்கு வேகமானது என்று கூறுகின்றனர். மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.

இந்த உலவியானது தரவுகளை பரிமாற்றும் போது தகவலானது மிகவும் சுருக்கப்ப்ட்டு பரிமாறிக்கொள்வதால் வேகமாக நமக்கு தேவையான செய்திகளை நாம் காணமுடியும். மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்படுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.

மேலும் முக்கியமாக இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.

இதில் மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது. மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் தந்தால் போதும்.

இது முற்றிலும் இலவசமானது.

                     மென்பொருளை கைப்பேசியில் தரவிறக்க கீழே சொடுக்கவும்


Downloads:

                        மென்பொருளை கணிணியில் தரவிறக்க கீழே சொடுக்கவும்


Downloads:


இதனை பற்றி மேலும் அறிய கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"