பேஸ்புக்கில் smart friends list


உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எதிர்பார்க்கின்றது.

இப்புதிய வசதியின் மூலம் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேக நண்பர் அட்டவணைகளை உருவாக்கியபின் அட்தெரிவுகளுக்கேட்ப வேறு நண்பர்களை இணைத்துக்கொள்வதற்கு Face book தானாகவே தேர்வுகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமது உற்ற நண்பர்களை வேறாக வகைப்படுத்திக்கொள்வதற்கும் இதன்மூலம் முடியும். இந்த அட்டவணையில் அதிகபட்சம் 10 நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம்.

இப்புதிய அறிவிப்பானது இதே வசதிகளைக்கொண்ட கூகிள் பிளஸ்ஸிற்கு போட்டியாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"