சீன மொழியானது இன்றைய நிலையில் உலகத்தில் அதிகமானவர்கள் பேசும் மொழியாக முதலிடத்தில் உள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலம் சீன மொழியினை மிக இலகுவாக கற்றுக் கொள்ளலாம்.
இங்கே சுமார் 150 தலைப்புக்களில் தமிழ் மூலம் சீனம் பாடம் வரிசையில் சீன மொழியை பேசுவது எப்படி? என்று மிக எளிதாக எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தந்திருக்கிறார்கள்.
இங்கே மிக எளிய நடையில் நடைமுறை உரையாடல்களுடன் பாடம் அமைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக..சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது, ஒருவருக்கொருவர் 你好(NI HAO)என்று கூறுவர்.你 (NI) என்றால் தமிழில் (நீ) என்பது பொருள். 好 (HAO) என்றால் நன்று என்று பொருள்.
சீன மொழியை கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்