ஃபேஸ்புக்கில் குழுசேர் (Subscribe) செயல்படுவது எப்படி?



ஃபேஸ்புக்கில் Subscribe என்ற அமைப்பின் மூலம் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள்  நமக்குத் தெரிய வரும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. Subscribe செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற உங்களுக்குத் தெரியாத நபர்களின் அப்டேட்களை நாமும் பெற இந்த வசதி உதவுகிறது. இதற்கு அவர்களின் பக்கத்தில் சென்று Subscribe செய்தால் போதுமானது. இதில் அவர்கள் Public என்று வெளியிடுகிற செய்திகளை நாம் பார்த்துக் கொள்ள முடியும்.

கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து ஃபேஸ்புக்கின் Subscribe பக்கத்திற்கு சென்று அதில் Allow Subscribers என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
http://www.facebook.com/about/subscriptions

அடுத்து Subscribe Settings பக்கம் வரும். இதில் கீழே உள்ள படத்தை போன்று மூன்று அமைப்புகள் உள்ளன.அதில் உங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்யவும்.பின்னர் ஒகே பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுக்கான Subscribe வசதி அமைக்கப்படும். இதன் பின் உங்கள் செய்திகளைப் பின் தொடர நினைக்கும் நண்பர்கள் Subscribe பட்டனைக் கிளிக் செய்து கொண்டால் நீங்கள் வெளியிடும் செய்திகள் அவர்களுக்கு சென்று சேரும்.


நாம் அடுத்தவரின் Subscribe வசதியைக் கிளிக் செய்து சேரும் போதே எந்த மாதிரியான அப்டேட்கள் மட்டுமே வேண்டும் என முடிவு செய்து Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த மாதிரி Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதன் மூலம் அடுத்தவர்களின் அத்தனை செய்திகளும் வராமல் கட்டுப்படுத்தலாம். பிடிக்கவில்லை என்றால் Unsubscribe செய்து கொள்ளலாம்.


All Updates, Most Updates, Only Important போன்ற வகைகளில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதே போல அப்டேட் செய்யப்படும் செய்திகளைப் பொறுத்து ஃபேஸ்புக் வகைப்படுத்தியிருக்கிறது. Status, Photos, Comments, Activities, Likes போன்றவற்றில் பிடித்தமானவற்றை வைத்துக் கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"