பதிப்புரிமை சிக்கல்கள் மற்றும் பிற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூகிள் புத்தகங்களில் டிஜிட்டல் புத்தகங்களை தரவிறக்க முடியவில்லையா? டெஸ்க்டாப் கருவிகளை பயன்படுத்தியும் அலுப்பாயிருக்கிறீர்களா?
நீங்கள் எந்த தடையும் இல்லாமல் இதன் மூலம் தரவிறக்க முடியும்.கூகிள் புக்ஸ் சேவை பயனர் அமைப்பு இல்லாமல் முழு புத்தகங்களை இலவசமாக டிஜிட்டல் பதிப்புகளாக தரவிறக்க முடியும். இதன் மூலம் கூகிள் புத்தகங்களை இலவச மின்னணு புத்தகங்களாக பதிவிறக்க விடாமல் செய்யும் கட்டுப்பாடுகளை நீக்க முடியும்.இது PDF வடிவத்தில் பதிவிறக்கங்கள் செய்யும் விதத்தில் தன்னிச்சையான அமைப்பில் உள்ளது.ஆனால் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் PDF, JPEG அல்லது PNG வடிவில் இந்த புத்தகங்களை சேமிக்க முடியும்.
இதற்கு நீங்கள் கூகிள் புக்ஸ் வலைப்பக்கத்திற்கு செல்லவும்.அங்கே உங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேடுதல் மூலம் தெரிந்து கொள்ளவும்.பின்னர் தேர்வு செய்த புத்தகம் உள்ள பக்கத்தின் URL ஐ காப்பி செய்து மென்பொருளில் பதிவு செய்து START பொத்தானை அழுத்த வேண்டும்.தரவிறக்கம் செய்யும் புத்தகங்களை சேமிக்கும் இடத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
கூகிள் புக்ஸ் வலைப்பக்கத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
இந்த சேவையை பயன்படுத்தி உலகின் 3 மில்லியனை விட அதிகமான இலவச புத்தகங்களை தரவிறக்க முடியும்.தரவிறக்கிய புத்தகங்களை அண்ட்ராய்டு இயக்கத்தளம் அல்லது IOS அடிப்படையில் மொபைல் சாதனங்கள் மூலம் படிக்க முடியும்.அடோப் டிஜிட்டல் மென்பொருள் மூலம் தரவிறக்கி E-Reader இல் படிக்க முடியும்.