புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டைம்லைன் மூலம் ஃபேஸ்புக்கில் எந்த செய்தியையும் ஆண்டு வாரியாக பார்க்கலாம்.இந்த டைம்லைன் வசதியை ஒரு “நினைவு பேழை” என்று கூட சொல்லலாம்.ஆனால் இதனை பெரும்பாலான மக்கள் அசௌகரியமாக நினைக்கின்றனர்.ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 பதிப்பு இந்த டைம்லைன் வசதிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் டைம்லைன் பயன்பாட்டில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 மற்றும் 7 பதிப்பினை தரவிறக்கி பயன்படுத்தினால் ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷன் செயல்படாது. 800 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதில் 40 மில்லியன் முதல் 64 மில்லியன் நண்பர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 பதிப்பை பயன்படுத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டைம்லைன் வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மாற்று வழியாக இருக்கும்.
நாம் பயன்படுத்தும் உலாவியின் மூலமாகவும் டைம்லைன் வசதியை தடை செய்யலாம்.அதற்காக கீழே தரப்பட்ட நீட்சியை நிறுவுதன் மூலமாக உங்கள் ஃபேஸ்புக் டைம்லைன் வசதியை செயல்படாமல் செய்யலாம்.ஆனால் இந்த நீட்சியை உலவியிலிருந்து நீக்கினால் ஃபேஸ்புக் டைம்லைன் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.