14 முறை மார்புகளைப் பெரிதாக்கிய குடும்பம் அடுத்து பின்பக்கத்தை பெரிதாக்க திட்டம்

இங்கிலாந்தைச் சேர்ந்த சான்டல் மார்ஷல் குடும்பத்தினர் போல எதையாவது செய்வார்கள். மார்ஷலும், அவரது நான்கு மகள்களும் தங்களது மார்பகத்தை மொத்தம் 14 முறை அறுவைச் சிகிச்சை மூலம் மிகப் பெரிதாக்கி அனைவரையும் பெருமூச்சு விடச் செய்தனர். இப்போது அடுத்த கட்டமாக தங்களது பின்புறங்களை பெரிதாக்க களம் இறங்கப் போகிறார்களாம் இந்த மெகா நெஞ்சுக் குடும்பத்தினர்.

சான்டலுக்கு 53 வயதாகிறது. இவர் மொத்தம் நான்கு முறை மார்பக அறுவைச் சிகிச்சை செய்து தனது மார்பகத்தை பிரமாண்டமாக்கியுள்ளார். அவரது மகள் 30 வயது எம்மாவும் அதேபோலத்தான் பெரிதாக்கியுள்ளார். 21 வயது மகள் ரிப்ளி 3 முறை ஆபரேஷன் செய்துள்ளார். 27 வயது டெல்லியும் பிரமாண்டமாகத்தான் காட்சி அளிக்கிறார். அதேபோல இன்னொரு மகள் தாராவும் 3 முறை ஆபரேஷன் செய்தவர். 14 வயதான கடைசி மகள் பிரிட்னியையும் தங்களுக்கு இணையாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அவர் இப்போதைக்கு அந்தத் திட்டம் தன்னிடம் இல்லை என்று கூறி வருகிறார். ஆனால் எதிர்காலத்தில் இவரும் பெரிதாகி விடுவாராம்.

இந்த நிலையில் அடுத்து தங்களது பின்புறங்களை பெரிதாக்கப் போவதாக இவர்கள் ஒரே குரலில் கூறுகிறார்கள். அதில் தாங்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும், ஒரே போல அனைவரும் தங்களது பின்புறங்களை பெரிதாக்கி புதிய சாதனை படைக்க விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து மூத்த மகள் எம்மா கூறுகையில், இப்போது எனக்கு இருக்கும் மார்புகளைப் பார்த்து எனக்குப் பெருமையாக உள்ளது. பெரிய மார்பு எனக்கு எடுப்பாகவம் இருக்கிறது. இதேபோல எனது பின்புறத்தைப் பெரிதாக்கவும் நான் ஆசைப்படுகிறேன், ஆர்வமாக உள்ளேன்.

ஏற்கனவே எனக்கு எடுப்பான பின்புறம்தான் உள்ளது. இருப்பினும் அதை சற்று பெரிதாக்கினால் மேலும் எடுப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். பார்க்கவும் அழகாக இருக்கும் என்பது எனது எண்ணம் என்றார். இதே கருத்தை எம்மாவின் அம்மாவும், சகோதரிகளும் கூட வழிமொழிந்தனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"