நடிகையின் நிர்வாண போட்டோக்களை வைத்து பிளாக்-மெயில்

பிரபல நடிகை ஒருவரின் நிர்வாண போட்டோக்களை வைத்து பிளாக்-மெயில் செய்த விவகாரம் ஒன்று பிரிட்டிஷ் கோர்ட்டில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு காரணங்கள்:

1) பிளாக்-மெயில் செய்தவர்கள் கேட்ட தொகை £4,000.

2) குற்றம்சாட்டப்பட்ட 35, 34 வயதான இரு சகோதரர்களும், 17 வயதுப் பெண்ணும், நடிகையை மிரட்டும் அளவுக்கு ப்ரபெஷனல் பிளாக்-மெயில் செய்பவர்கள் அல்ல. இவர்களது கைகளில் தற்செயலாக நடிகையின் நிர்வாண படங்கள் கிடைத்துள்ளன.

3) சம்மந்தப்பட்ட பிரபல நடிகை யார் என்பதை சொல்ல கோர்ட்டில் மறுத்துவிட்டது போலீஸ்.

லண்டனில் உள்ள வீடு ஒன்றை திருடுவதற்காக உடைத்த இந்த மூவர் அணி, அங்கிருந்த லேப்-டாப் ஒன்றையும் திருடிச் சென்றிருக்கிறது. லேப்-டாப்பில் இருந்த பைல் ஒன்றில், பிரபல நடிகை ஒருவரின் நிர்வாண போட்டோக்கள் இருந்திருக்கின்றன.

நடிகையை தொடர்பு கொண்ட இவர்கள், குறிப்பிட்ட போட்டோக்கள் வெளியிடப்படாமல் இருக்க வேண்டும் என்றால், £4,000 கொடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் போட்டோக்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். (பேசாமல் பத்திரிகைகளுக்கே போட்டோக்களை அந்த விலைக்கு விற்றிருக்க முடியும்)

போட்டோக்கள் நிஜமானவை என்பதை ஒப்புக்கொண்ட நடிகை £4,000 தொகை கொடுக்க தயாரானபோது, விஷயமறிந்த பிரிட்டிஷ் போலீஸ், நடிகையின் பெயரை கோர்ட்டில் வெளியிட மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்து, புகார் பெற்று, மூவரையும் கைது செய்துள்ளது.

சிக்கல் என்னவென்றால், மூவரும் இந்த லேப்-டாப்பை எந்த வீட்டில் திருடினோம் என்பதை மறந்து விட்டார்கள். காரணம், திருட்டு நடந்தது இந்த ஆண்டு ஜனவரியில். நடிகை தொடர்பு கொள்ளப்பட்டது, இந்த மாதம் 10-ம், 12-ம் தேதிகளில்.

திருடப்பட்ட லேப்-டாப்பில் இந்த போட்டோக்கள் இருந்த காரணத்தாலோ, என்னவோ, லேப்-டாப் திருடப்பட்ட விஷயத்தில் யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால், திருட்டு தொடர்பாக இவர்கள்மீது குற்றச்சாட்டு ஏதும் பதிவாகவில்லை.

லீ ஃபெப்ரெயர், வேர்னென் ஃபெப்ரெயர் ஆகிய இரு சகோதரர்கள் மற்றும் 17 வயதாக பெண் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இளம் பெண்ணுக்கு 18 வயதாகவில்லை என்பதால், பிரிட்டிஷ் சட்டப்படி அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

திருட்டு தொடர்பாகவும் புகார் கிடையாது, பிளாக்-மெயில் செய்யப்பட்ட நடிகையும் யார் என்று தெரியாது என்று உள்ள விசித்திர நிலையில், இவர்கள் மூவரையும் என்ன செய்வது என்று புரியாமல், வழக்கை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"