மகளின் பள்ளித் தோழர்களுடன் செக்ஸ் உறவு வைத்தவர் கைது


தனது மகளின் நண்பர்களான இரு பள்ளி மாணவர்களுடன் செக்ஸில் ஈடுபட்ட பெண்ணுக்கு 7 வருட சிறை தண்டனை கிடைக்கவுள்ளது.

4 குழந்தைகளின் தாயான பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி பேகர் என்ற 35 வயது பெண் மதுபோதையில் 14 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் ஒரே நேரத்தில் செக்ஸ் வைத்துள்ளார்.

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள டட்வேர்த் நகரில் உள்ள கெல்லியின் வீட்டுக்கு அவரது மகள் தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருந்தளித்தார். இதற்காக 10 மாணவ, மாணவிகள் கெல்லியின் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது கெல்லி மது அருந்திவிட்டு அவர்களில் 16 வயதான ஒரு மாணவனுடன் சமயலறையில் நடனமாடியுள்ளார். பின்னர் அவனுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

அப்போது அதைப் பார்த்துவிட்ட 14 வயது சிறுவனையும் இழுத்து பாலியல் உறவு வைத்துள்ளார். 14 வயது சிறுவனுடன் பாலியல் நடத்தையில் ஈடடுபட்ட குற்றச்சாட்டில் கெல்லி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை கெல்லி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனையை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"