லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்த காதலர்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் லதா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது)சென்னை வேளச்சேரியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்தார். இவருக்கும் பட்டணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மணிகண்டன் வேன் டிரைவராக உள்ளார். கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து லதா வீட்டுக்கு பஸ்சில் வருவதாக பெற்றோரிடம் கூறினார். மகளை அழைத்து செல்ல பஸ் நிலையத்தில் அவரது தந்தை காத்திருந்தார். ஆனால் லதா வரவில்லை.

இதையடுத்து மகள் பணி புரிந்த பேன்சி ஸ்டோர் உரிமையாளருக்கு தந்தை போன் செய்து கேட்டார். வீட்டுக்கு செல்வதாக கூறிதான் லதா சென்றார் என்று தெரிவித்தார். பின்னர் உறவினர், நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு அலங்கோலமாக வந்த லதா, தன்னை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த விவரங்களை கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லதாவின் தந்தை, ரோசணை போலீசில் புகார் அளித்தார்.

புகாரில், ‘கடந்த 8ம் தேதி திண்டிவனம் வந்த தனது மகளை மிரட்டி பைக்கில் செஞ்சிக்கு மணிகண்டன் கடத்தி சென்றார். அங்குள்ள லாட்ஜில் அடைத்து வைத்து 12ம் தேதி வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 13ம் தேதி மணிகண்டனின் அக்கா வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து மகள் தப்பித்து வந்துள்ளார். கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"