பறக்கும் விமானத்தில் பிகினி உடையில் அழகிப் போட்டி (வீடியோ இணைப்பு)


பறக்கும் விமானத்தில் பெண்களை உடைகளைக் களைய வைத்து அழகிப் போட்டி நடத்திய வியட்நாம் விமான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் வியட்ஜெட்ஏர் என்ற புதிய விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹோசிமின் சிட்டியிலிருந்து நகா தராங் என்ற இடத்துக்குச் சென்றது.

விமானம் கிளம்பியதும் உடைகளைக் களைந்து போட்ட பெண்கள் பிகினி உடையில் நடனமாட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களிடையே அழகிப் போட்டியும் நடந்தது.

இதை ரசித்த பல ஆண் பயணிகளும் அதை செல்போன்களிலும் படம் பிடித்தனர். சிலர் அதை யு டியூப்பிலும் வீடியோவாக போட்டுவிட்டனர்.

இதையடுத்தே இந்த விஷயம் வெளியே தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனத்துக்கு வியட்நாம் விமானப் போக்குவரத்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"