கசமுசாவை மாட்டி விட்டதால் கொலை செய்த கள்ள காதல் ஜோடி


நாமக்கல்லில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்த இரு தொழிலாளர்களுக்கிடையே கள்ளக்காதல் மூண்டது. வேலையைப் பார்ப்பதை விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டதால் முகம் சுளித்த அதே ஸ்டாண்டில் வேலை பார்த்த ஒரு பெரியவர், ஸ்டாண்ட் உரிமையாளரிடம் மாட்டி விட்டார். இதனால் அந்தப் பெண்ணுக்கு வேலை போனது. இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெரியவரை கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்கள் இருவரும்.

கொல்லிமலை அக்கரை வளைவுபட்டியை சேர்ந்தவர் 25 வயதான தெய்வானை. இவரது கணவர் பெயர் என்ன தெரியுமா… முருகன்!. புராணத்தில்தான் முருகனின் மனைவியாக கடைசி வரை இருந்தார் தெய்வானை. ஆனால் இந்தத் தெய்வானை தனது கணவர் முருகனை விட்டுப் பிரிந்து தனியாக வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார்.
இவர் ஒரு சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தார். அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தவர் சுரேஷ் குமார். இவருக்கும் கல்யாணமாகி, குடும்பம் உள்ளது.

ஒரே இடத்தில் சுரேஷ் குமாரும், தெய்வானையும் வேலை பார்த்து வந்ததால் பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொண்டு விட்டது. கள்ளக்காதலில் இருவரும் சாய்ந்து விட்டனர். தங்களது கள்ளக்காதலை வளர்க்க வேறு எங்கும் இடம் தேடாமல், சைக்கிள் ஸ்டாண்டிலேயே லீலைகளை தொடர ஆரம்பித்தனர். ஸ்டாண்ட்டில் சைக்கிள்கள் குவிந்து கிடக்கும் இடத்தில் இவர்களும் அவ்வப்போது ஒதுங்க ஆரம்பித்தனர். இதனால் சைக்கிள் ஸ்டாண்டுக்கு வருவோர் கண்ட காட்சிகளையும் பார்க்க நேரிட்டது.

இதைப் பார்த்து வெகுண்டார் அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து என்ற பெரியவர். 62 வயதான இவர் தெய்வானை, சுரேஷ்குமாரின் அசிங்கத்தை ஸ்டாண்ட் உரிமையாளரிடம் போய்ச் சொன்னார். இதையடுத்து கூப்பிட்டு விசாரித்த ஸ்டாண்ட் உரிமையாளர், தெய்வானையை வேலையை விட்டு நீக்கி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் தெய்வானை. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மாரிமுத்துதான் காரணம் என்று கோபமடைந்தார். இதையடுத்து சுரேஷ்குமாரிடம் பொறுமினார். அவரை அமைதிப்படுத்திய சுரேஷ்குமார், மாரிமுத்துவைக் கொன்று விடலாம் என்று தெய்வானையிடம் கூற அவரும் சம்மதித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம் போல் மாரிமுத்து சைக்கிள் ஸ்டாண்டுக்கு வேலைக்கு சென்றார். அப்போது, தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த பாழும் கிணற்றுக்கு அருகே காத்திருந்த சுரேஷ்குமாரும், தெய்வானையும், மாரிமுத்துவை அணுகிப் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் நைசாக அவரை கிணற்றுக்கு அருகே கூட்டிச் சென்று அப்படியே தள்ளி விட்டு விட்டனர். இதனால் பெரியவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
அதன் பின்னர் சுரேஷ்குமார் செய்த செயல்தான் அதிர்ச்சி தரக் கூடியது. கிணற்றையே மண்ணைப் போட்டு மூடி விட்டார் சுரேஷ்குமார். தினசரி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் போட்டு மூடி வந்த சுரேஷ்குமார் முழுக் கிணற்றையும் மூடி விட்டார்.

இந்த நிலையில், மாரிமுத்துவைக் காணாமல் தவித்த அவரது 2வது மனைவி சாந்தி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஸ்டாண்ட்டில் வந்து விசாரித்தபோதுதான் சுரேஷ்குமார், தெய்வானை, அவர்களுக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, வேலை நீக்கம் உள்ளிட்ட விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாரும், தெய்வானையும் எஸ்கேப் ஆகி விட்டனர். ஆனால் போலீஸ் பிடி இறுகி வந்ததால் இருவரும் விஏஓ முன்னிலையில் சரணடைந்தனர். அவர், இருவரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தற்போது மூடப்பட்டு விட்ட கிணற்றைத் தோண்டி மாரிமுத்துவின் உடலை மீட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"