ஆண்கள் பாவாடை அணிந்து வர பல்கலைகழகம் அனுமதி


பெண்கள் கோட் அணிந்து செல்லவும், ஆண்கள் பாவாடை அணியவும் ஓக்ஸ்போர்ட் பல்கலைகழகம் அனுமதி அளித்துள்ளது.ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த விதிமுறை கடுமையாக பின்பற்றப்படுகிறது.

அங்கு ஆண்கள் கறுப்பு நிற கோட் மற்றும் பேன்ட், கறுப்பு நிற ஷூ அணிய வேண்டும்.
பெண்கள் கறுப்பு நிற பாவாடையும், வெள்ளை நிற ஜாக்கெட்டும் அணிய வேண்டும்.
இந்நிலையில் திருநங்கைகள், பாலின மாற்றம் செய்து கொண்டவர்கள் தாங்கள் விரும்பும் ஆடையை அணிய அனுமதிக்கும்படி, நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.
இதன்படி ஆண்கள் பாவாடை மற்றும் ஸ்டாக்கிங்ஸ் அணியவும், பெண்கள் கோட் மற்றும் பேன்ட் அணியவும் பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"