முத்தம் கேட்ட காதலனின் நாக்கை துண்டித்த காதலி


முத்தம் தா... முத்தம் தா.. என அடிக்கடி முத்தம் கேட்டு தொந்தரவு செய்த காதலனின் நாக்கை கடித்து துப்பிய காதலி கைது செய்யப்பட்டார். அவர் மீது தப்பில்லை எனக் கூறி நீதிபதி விடுதலை செய்தார். ஜெர்மனியில் நடந்த இந்த கடி சம்பவம் காதலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டினா முல்லரும் மார்க் ஸ்மித்தும் காதலர்கள். ஜெர்மனியின் பாடர்பெர்ன் நகரில் நடந்த ஒரு கேளிக்கை திருவிழாவில் பங்கேற்ற பின் போதையோடு வந்தார் மார்க். குடிபோதையில் காதலனை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது டினாவுக்கு.இப்படியா கண்ணுமண்ணு தெரியாமல் குடிப்பது? என கடிந்து கொண்டார். பிறகு கோபம் குறைந்து, மார்க்கின் கன்னத்தில் முத்தமிட்டு, படுத்து தூங்கும்படி கூறினார்.

லிப் டு லிப் கிஸ் வேண்டும் என அடம் பிடித்தார் மார்க். டினா மறுத்தார். காதலன் பிடிவாதம் பிடிக்கவே, உதட்டில் முத்தம் கொடுத்தார். மீண்டும், மீண்டும் முத்தம் கேட்கவே வெறுப்பானார் டினா. உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே, மார்க்கின் நாக்கை தேடிப்பிடித்தார். ஒரே கடி. அவ்வளவுதான். மார்க்கின் வாயில் ரத்தம் கொட்டியது. போதை இறங்கியது. வாயை பொத்தியபடி வெளியே ஓடினார்.ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டில் போய்தான் நின்றார்.

ரத்தத்தை பார்த்து அலறிய பாட்டி, என்னடா ஆச்சு என விசாரித்தபடியே, ரத்தம் கொட்டிய வாயைப் பார்த்தார். பாதி நாக்கை காணவில்லை.
நாக்கு எங்கே எனக் கேட்க, பேச முடியாமல் தன்னுடைய வீட்டை நோக்கி கையைக் காட்டினார் மார்க். துண்டான நாக்கை தேடி இருவரும் காரில் விரைந்தனர். நாக்கை தேடி கண்டுபிடித்தனர். அதோடு டாக்டரிடம் பறந்தனர். ஆனால் டாக்டர்கள் நாக்கை இணைக்க முடியாது எனக் கூறிவிட்டு, அறுந்த நாக்கை தையல் போட்டு தைத்தனர்.

காதலி மீது வழக்கு தொடர்ந்தார் மார்க். கைது செய்யப்பட்டார் டினா.
டினா மனநலப் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அதனால் அவரை குறை சொல்ல முடியாது. அவர் தெரிந்தே நாக்கை கடிக்கவில்லை என டினாவின் வக்கீல் வாதிட்டார். டினாவை நீதிபதி விடுதலை செய்தார். தன்னுடைய தவறுக்கு காதலன் மார்க்கிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் 2 வாரங்களுக்கு முதியோர் இல்லத்தில் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

டினாவின் மன்னிப்பு கடிதத்தை வாங்க மார்க் மறுத்துவிட்டார். இந்த ஜென்மத்துல டினாவை மன்னிக்க மாட்டேன் என தீர்ப்பைக் கேட்டதும் புலம்பித் தள்ளிவிட்டார் மார்க்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"