நண்பரின் இதயத்தையும், மூளையையும் சாப்பிட்ட ஆசாமி.


அமெரிக்காவில் நபர் ஒருவர், தன் நண்பரை கொலை செய்து விட்டு அவரது மூளையையும், இதயத்தையும் எடுத்து சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜோ பான்சாபோ(வயது 37). இவர் அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள ஜோப்பா என்ற இடத்தில் அலெக்சாண்டர் கின்யுவா என்பவருடைய வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தலையும், கைகளும் துண்டித்து குஜோ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொலையை செய்தது அலெக்சாண்டர் தான் என்பது தெரியவந்தது. கத்தியால் குஜோவின் தலையையும், கைகளையும் துண்டித்து கொலை செய்ததுடன், அவரது இதயத்தையும், மூளையையும் அகற்றி சாப்பிட்டு இருக்கிறார்.

கல்லூரி மாணவரான அலெக்சாண்டர் இப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"