40 வயது பெண்ணுக்கு செக்ஸ் வலை விரித்த 17 வயது மாணவன்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் மேலதெருவை சேர்ந்தவர் விஜயன். விவசாயி. இவரது மனைவி முத்தரசி (வயது 40. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 – ந் திகதி இரவு முத்தரசி வீட்டில் இருந்தார். அப்போது இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்த போனில் அழைப்பு வந்தது. உடனே போனை எடுத்து முத்தரசி ஹலோ என்றார். அதற்கு மறுமுனையில் ஒரு வாலிபர் குரல் கேட்டது. அந்த வாலிபர் பெண் குரலை கேட்டதும் மயங்கினார்.

உடனே அவர் தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார். பின்னர் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி செக்ஸ் டார்ச்சர் செய்தார். இதனால் முத்தரசி அதிர்ச்சி அடைந்து வாலிபர் பேசிய போனை துண்டித்தார். பின்னர் கடந்த5- ந் திகதி நள்ளிரவில் 12 மணிக்கு அதே வாலிபர் மீண்டும் முத்தரசிக்கு போன் செய்தார். அப்போதும் அந்த வாலிபர், முத்தரசியிடம் நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் என்று கூறி செக்ஸ் டார்ச்சர் செய்தார்.

இதேபோல் அன்று இரவு மட்டும் 5 முறைக்கு மேல் போன் செய்து, முத்தரசிக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் நிலைமை விபரீதமாவதை உணர்ந்த முத்தரசி, இதுகுறித்து தனது கணவர் விஜயனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் செக்ஸ் டார்ச்சர் போன் குறித்து அவர் ஒரத்தநாடு பொலிஸில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் முத்தரசியிடம் போனில் பேசிய வாலிபரின் செல்போன் நம்பரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் இறங்கினர். அதில் வாலிபரின் செல்போன் நம்பர் குறித்து பொலிஸாருக்கு தெரிய வந்தது. பின்னர் வாலிபரின் செல்போன் நம்பரில் பொலிஸார் மாற்று குரலில் பேசினர். எல்.ஐ.சி. பாலிசி விஷயமாக பேசுவது போல் பேசி,வாலிபரின் முகவரியை நைசாக பொலிஸார் வாங்கினர்.

பின்னர் அந்த வீட்டு முகவரிக்கு சென்று அந்த வாலிபரை பொலிஸார் பிடித்தனர். பொலிஸார் பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் ,ஒரத்தநாடு அருகேயுள்ள அலகுலமங்கலத்தை சேர்ந்த தமிழழகன் (வயது 17)என தெரிய வந்தது. இவர் அப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1படித்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் பொலிஸார், மாணவன் தமிழழகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் எனது நண்பனுக்கு போன் செய்தபோது நம்பர் மாறி பேசியபோது பெண் குரல் கேட்டது. அதனால் பெண் பேச்சில் மயங்கி உல்லாசமாக இருக்க செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். பின்னர் மாணவன் தமிழழகனை பொலிஸார் கைது செய்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"