காதலியை நண்பருக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்

திருச்சி கண்டோன் மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் அருண்.இவரது மகள் மலர்.இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மலர் வீட்டுக்கு தாமதமாக வந்தார். மேலும் சோகமாக காணப்பட்டார். இதனால் அவரது பெற்றோர் மலரிடம் விசாரித்தனர். முதலில் சொல்ல தயங்கிய மலர், பின்னர் அவர் கூறிய காரணத்தை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மலர் கல்லூரிக்கு சென்று வந்தபோது பாலக்கரையை சேர்ந்த சாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை காதலித்து வந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாஜி, சம்பவத்தன்று மலரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பி மலர் சாஜியுடன் சென்றார். அப்போது அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் உடன் இருந்துள்ளார். ரமேஷ் ஒரு டாக்டரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 2 பேரும் வில்லியம்ஸ் காலனி அருகே புதர் பகுதிக்கு சென்றபோது திடீர் என்று ரமேஷ் கத்தியை காட்டி மிரட்டி மாணவி மலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அருகில் இருந்து சாஜி ரசித்ததாக கூறி மலர் கதறி அழுதார்.

இதுபற்றி மாநகர துணை கமிஷனர் சத்திய பிரியாவிடம் பெற்றோர் புகார் கூறினர். புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கண்டோன் மெண்ட் இன்ஸ்பெக்டர் சிகாமணி தலைமையில் மாணவி மலரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதன்பேரில் பொலிஸார் மலரின் காதலன் சாஜி மற்றும் கார் டிரைவர் ரமேஷ் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"