சீனாவின் குவாங்கி என்ற இடத்தில், குய்லின் மேரிலாண்ட் என்ற பொழுது போக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்கா நிர்வாகம், வாடிக்கை யாளர்களை கவர்வதற்காக, அவ்வப்போது, ஏதாவது அதிரடியாக செய்வது வழக்கம். இந்த முறை, கிளு கிளுப்பான ஒரு விஷயத்தை செய்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
"இந்த பொழுது போக்கு பூங்காவுக்கு வரும் பெண்கள், 38 செ.மீ.,க்கும் குறைவான குட்டைப் பாவாடை (ஷார்ட் ஸ்கர்ட்) அணிந்து வந்தால், அவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என்பது தான், அந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு. 38 செ.மீ.,க்கு, ஒரு செ.மீ., அதிகமாக இருந்தாலும், இந்த சலுகையை பெற முடியாது.
இங்கு வரும் பெண்களின் குட்டைப் பாவாடையை அளப்பதற்காகவே, பொழுது போக்கு பூங்காவின் நுழைவாயில் அருகே, ஏராளமான பெண் ஊழியர்கள், கைகளில் டேப்புகளுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம், இளம் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கவர முடியும் என்றும், இதைப் பார்ப்பதற்காக ஆண்களும் அதிக அளவில் வருவர் என்றும், பொழுது பூங்கா நிர்வாகம் கணக்கு போட்டுள்ளது. ஆனால், "இந்த கிளு கிளுப்பான அறிவிப்பு, விஷமத்தனமான செயல்'என, பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
