நிர்வாணப் போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்த டீச்சர்!


சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை தனது கணவருடன் உல்லாச கோலத்தில் இருக்கும் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் போட்டு பெற்றோர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளார்.இவர் ஒரு பயிற்சி ஆசிரியை. இவர் தனது பேஸ்புக்கில் ஒரு காட்டமான செய்தியை சில நிர்வாணப் படங்களுடன் போட்டு வைத்துள்ளார். அதில் பெற்றோர்களை கடுமையாக அவர் சாடியுள்ளார். மேலும் அவரது கணவருடன் உல்லாசமாக இருக்கும் நிர்வாணப் படங்களையும் கூடவே இணைத்துள்ளார்.

அதில், சில பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் 24 மணி நேரமும் தாங்கள் தொடர்பு கொண்டு தொணத்தி எடுக்கலாம் என்ற நினைப்பு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஹோம் ஒர்க் என்ன, என்ன பாடம் நடந்தது என்று கேட்டு மெசேஜ் அனுப்புவதே சிலருக்கு வேலையாகப் போய் விட்டது. தஙக்ளது பிள்ளைகளின் டைரிகளை அவர்கள் சரியாகப் பார்ப்பதே கிடையாது.

ஒவ்வொரு மாணவ, மாணவியும்வகுப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களது கையேடுகளை சரி பார்த்து விட்டுத்தான் நான் அனுப்புகிறேன். ஆனால் பெற்றோர்களுக்கு இதில் அக்கறையே இல்லை. பெரிய தொல்லையாக இருக்கிறது என்று எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த செய்தியில் ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு.
இதைப் பார்த்து ஜேன் என்ற ஒரு பெண்மணி கடும் கோபத்துடன் அந்த ஆசிரியையை விமர்சித்துள்ளார். இந்த ஆசிரியையின் ஆங்கிலப் புலமையைப் பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். தப்புத் தப்பாக எழுதும் இவரை நம்பி எப்படி எங்களது பிள்ளைகளை அனுப்புவது என்று பயமாக உள்ளது. இவர் தனது கணவருடன் இருக்கும் உல்லாசப் படங்களையும் போட்டு வைத்துள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அவரது பள்ளிப் பிள்ளைகள் பலரும் கூட பேஸ்புக்கில் உள்ளனர். அப்படி இருக்கையில் தனது பள்ளிப் பிள்ளைகள் தனது நிர்வாணப் படத்தை பார்க்க இவர் அனுமதிப்பது எப்படி சரியான செயலாகும் என்றார் கோபத்துடன்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"