பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிட்ட மனிதன்!


தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.

பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறித்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"