பின்லேடனின் 5வது மனைவிக்கு செக்ஸ் இல் அதிக ஆர்வம்: மூத்த மனைவி


பாகிஸ்தான் அபோதபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி இயக்கத்தின் தலைவர் பின்லேடனுக்கு 5 மனைவிகள். இவர்களில் 5-வது மனைவி அமல். ஏமன் நாட்டை சேர்ந்தவர்.

17 வயதில் இவரை பின்லேடன் தனது 55 வயது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் அமல் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். அமலுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே, அவர் எப்போதும் பின்லேடனுடன் தனி அறையில் செக்ஸ்-இல் ஈடுபட்டு வந்தார்.

ஆகவேதான் பின்லேடனுக்கு மிகவும் பிடித்த மனைவியாக அவர் விளங்கினார். மேலும், அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய விரும்பினார். அங்கு அரச குடும்பத்தினரை சந்திக்கவும் ஆசைப்பட்டார். இதை பின்லேடனின் மூத்த மனைவி கைரியா தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமல் உள்பட 3 மனைவிகள் மற்றும் 13 குழந்தைகள் உடன் இருந்தனர். தற்போது, இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். கடைசி மனைவி அமல் சொந்த நாடான ஏமனுக்கு தனது 4 குழந்தைகளுடன் செல்கிறார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"