தோஷம் இருப்பதாகக்கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதி.


இலங்கையின் திஸ்ஸமகாராம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு மந்திரம் செய்வதற்காகச் சென்ற மந்திரவாதி ஒருவர், அங்குள்ள 16 வயது சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் அவருக்கு குறி மந்திரம் செய்ய வேண்டும் எனவும் கூறி, சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெடிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், திஸ்ஸமகாராம பிரதேசத்தின் அதே கிராமத்தின் வேறொரு வீட்டில் மந்திரம் செய்ய வந்ததை அடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"