நண்பியின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய கல்லூரி மாணவி!


தன் உடல் அழகை அசிங்கமாக வர்ணித்த தனது தோழி மீது கோபம் கொண்ட ஒரு கல்லூரி மாணவி, அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் அப்லோட் செய்து விட்டார். இதையடுத்து அந்த மாணவியை போலீஸார் கைது செய்தனர்.

கொல்கத்தாவிலதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரபலமான கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை, அவரது தோழி கடந்த மே மாதம் விமர்சனம் செய்துள்ளார். மாணவியின் உடல் அழகை அவர் மட்டம் தட்டிப் பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபம் கொண்ட அந்த மாணவி, தனது தோழியின் ஆபாசப் படங்களை கலெக்ட் செய்தார். அவர் உடைமாற்றும்போதும், தூங்கும்போதும், குளிக்கும்போதும் எடுக்கப்பட்ட படங்களை சேகரித்தார். பின்னர் இந்தப் படங்களை ஒரு டேட்டா கார்டில் போட்டுப் பதிவு செய்து கொண்டு அதன் பின்னர் இன்டர்நெட்டில் ஏற்றி விட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தோழி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் எந்க கம்ப்யூட்டரிலிருந்து இந்தப் படங்கள் அப்லோட் செய்யப்பட்டன என்பதைப் பார்த்தபோது ஒரு இளைஞரிடம் போய் அது நின்றது. இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது கல்லூரி மாணவியை அவர் கை காட்டினார். இதையடுத்து அந்த மாணவியை தற்போது போலீஸார் பிடித்துள்ளனர்.

அந்த இளைஞரிடம், இந்த கல்லூரி மாணவி போலியான முகவரியைக் கொடுத்து டேட்டா கார்டை வாங்கியதும் தெரிய வந்தது. தற்போது அந்த மாணவியை போலீஸார் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"