நடிகையின் உடையை கிழித்து கற்பழிக்க முயற்சி

மேற்கு வங்காள மாநிலம் சந்தர்நாகூர் நகரில் வசிப்பவர் ஆர்த்தி பட்டாச்சார்யா. இவர் மாடல் அழகியான இவர் ஏராளமான வங்காள மொழி படங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். தற்போது வங் காள டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார், 3 வருடங் களுக்குமுன் இவர் சந்தர்நா கூரில் ஒரு பிளாட் வாங்கி குடியேறினார். அவரது வீடு தரைத்தளத்தில் உள்ளது.

பெற்றோர் கணவர் மிரின்மாய் ஆகியோருடன் வசித்து வந்தார். இவ ரது வீட்டையொட்டி அந்த பிளாட்டை நடிகைக்கு விற்ற ரியல் எஸ் டேட் அதிபர்கள் சுமித்சுர், ஆஷீஷ் முகர்ஜி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். வீட்டிலேயே அலுவலகமும் நடத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் ஆர்த்தியின் படுக்கையறையையொட்டி உள்ளது. ரியல்எஸ்டேட் அதிபர்களை சந்திக்க தினமும் ஏராளமானோர் வந்து சென்றனர். அங்கு பணி புரியும் ஊழியர்களும் தினமும் வந்து செல்கி றார்கள். அவர்கள் போடும் சத்தம், வருவதும் போவதுமாக இருப்பது நடிகை ஆர்த்தி பட்டாச்சார்யாவுக்கு இடையூறாக இருந்தது.

இதுபற்றி ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நடிகை ஆர்த்தி புகார் கூறி னார். அவர்கள் இனி தொந்தரவு கொடுக்காமல் பார்த்துக் கொள்கி றோம் என்றனர். ஆனால் இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வில்லை. தொடர்ந்து ஆபாச வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி பேசிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு வரை அவர்களது தொந்தரவு நீடித்தது. சம்பவத்தன்று இரவு ரியல் எஸ்டேட் அதிபர் சுமித்தின் டிரைவர் நிஷாத் குடி போதையில் நடிகை ஆர்த்தியின் வீட்டின் முன் நின்று ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தார்.

நடிகை வீட்டுக் கதவு திறந்து இருந்ததை கூட பார்க்காமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். உடனே நடிகை அங்கு வந்து அவர்களை தட்டிக் கேட்டார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர்களும் அங்கு வந்தனர். அவர்கள் தங்களது ஆட்களை கண்டிக்காமல் நடிகையுடன் தகராறு செய்வதை வேடிக்கை பார்த்தனர்.

மோதல் உச்ச கட்டமானதை தொடர்ந்து ரியல்எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது ஆட்கள் நடிகையின் டி-சர்ட், பைஜாமாவை கிழித்தனர். அவரை சரமாரியாக தாக்கினார்கள். நடிகையை வீட்டுக்குள் தள்ளி மானபங்கம் செய்து கற்பழிக்க முயன்றனர். அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்தார். அவரையும் தாக்கினார்கள்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் அரசியல் பிரமுகர் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் சம்ப வத்தை தடுக்க முன்வரவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிய நடிகை ஆர்த்தி இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் டிரைவர் மீது மட்டும் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்து உடனே ஜாமீனில் விடுதலை செய்து விட்டனர்.

படுகாயம் அடைந்த ஆர்த்தியும், அவரது தாயாரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து அவர்கள் நிருபர்களை அழைத்து விளக்கினார்கள். போலீசில் புகார் செய்ததால் ரியல்எஸ்டேட் அதிபரும் அவரது ஆட்களும் தங்களை தொடர்ந்து மிரட்டுகிறார்கள். ஆசிட் வீசுவோம் என்றும் மிரட்டல் விடுப்பதாகவும் நடிகையும், தாயாரும் தெரிவித்தனர்.

போலீசாரும் எங்கள் மீது திருட்டு வழக்கு போடப்போவதாக மிரட்டு கிறார்கள். எனவே நாங்கள் குடும்பத்துடன் ஊரையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கண்ணீர் மல்க கூறினார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் இது ஒரு சாதாரண சம்பவம் பெரிதாக்கி விட்டார்கள் என்றனர்.-

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"