மலையாள தந்திரியை இளம்பெண்ணுடன் நிர்வாணப்படுத்தி படம் எடுத்து மிரட்டிய பெண் கைது


கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பகுதியில் வளஞ்சம்பலத்தில் உள்ள லிங்க் லட்சுமணன் வளாகத்தில் அடுக்குமாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்திருந்தார் சோபா ஜான் என்ற பெண்.அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் முன்பு தந்திரியாக இருந்த கண்டரரு மோகனரு சென்றார்.

அங்கு சென்ற தந்திரி கண்டரரு மோகனருவை, சோபா ஜான் மற்றும் சிலர் சேர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் சாந்தாவுடன் நிர்வாணப்படுத்தி, கேமராவில் ஆபாசப் படம் எடுத்தனர். பின்னர் அந்த படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டி ரூ.20 லட்சம் பணம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தந்திரியிடம் இருந்து பறித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருவனந்தபுரம் கல்லயத்தை சேர்ந்த சோபா ஜான் (வயது 38), நடிகர் பெச்சு ரகுமான் என்ற அப்துல்ரகுமான் (50), திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் அனில்குமார் (38), திருக்கரிப்பூர் அப்துல்சத்தார் (38), மஜீத் (34), ஷிரிபாக்லு பகுதியை சேர்ந்த செரீப் (39), குருவாயூர் பிஜி பீட்டர் (33), காசர்கோடு அஜீஷ் (45), திருவனந்தபுரம் வெள்ளறடை பினில்குமார் என்ற விஜில் (34), ஷிரிபாக்லு புளிக்கூரை சேர்ந்த ஆசிப் (25), புளிக்கூர் அப்துல் சகத் (30) ஆகியோர் சேர்ந்து தந்திரி மோகனருவை தாக்கி மிரட்டி நகை மற்றும் பணம் பறித்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து சோபாஜான், பெச்சு ரகுமான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பினில் குமார் என்ற விஜில், ஆசிப், அப்துல் சகத் ஆகிய 3 பேர் தலைமறைவாகி விட்டனர். கைதான 8 பேர் மீது திருட்டு, சதித்திட்டம் தீட்டுதல், பெண்மையை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை எர்ணாகுளம் கூடுதல் துணை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 29 புகைப்படங்கள் பரிசோதித்து பார்க்கப்பட்டன. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சோபா ஜான், நடிகர் பெச்சுரகுமான் உள்பட 11 பேரும் குற்றவாளிகள் என்று கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி இ.சி.அரிகோவிந்தன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

தலைமறைவாகியுள்ள பினில்குமார் என்ற விஜில், ஆசிப், அப்துல் சகத் ஆகியோர் பிடிபடுவதற்கு ஏற்ப கோர்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட 8 பேருக்குரிய தண்டனைகள் குறித்து  தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சோபா ஜான், நடிகர் பெச்சுரகுமான், அனில்குமார், அப்துல்சத்தார், மஜீத், செரீப், பிஜி பீட்டர், அஜீஸ் ஆகிய 8 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் சோபாஜான், நடிகர் பெச்சு ரகுமான் உள்பட 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பிஜி பீட்டர், அஜீஸ் ஆகிய 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6-வது குற்றவாளி சகத் விசாரணைக்கு பின்னர் தலைமறைவானதால் அவரது தண்டனை பற்றி அறிவிக்கப்படவில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"