உலவியில் பிழைதிருத்தும் தமிழ் அகராதி நீட்சிநெருப்புநரி உலவியில் இணையத்தை உலா வரும்பொழுது, வலைப்பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் நாம் தட்டச்சு செய்கையில் எழுத்துப் பிழைகள் சில வருவது இயல்பு, அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த மொழியிலும் எழுத்துப் பிழைகளை கண்டறிய நெருப்புநரியில் Spell Checker நமக்கு உதவுகிறது.

முதலில் கீழே தரப்பட்ட நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.பின்னர் நெருப்புநரி உலவியின் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுக்கவும். உடனடியாக ஒரு எச்சரிக்கை பெட்டி வரும்.
இதில் I'll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள். அடுத்த திரையில் Filter டெக்ஸ்ட் பாக்ஸில் layout.spellcheckDefault என டைப் செய்யவும்.
இனி பட்டியலில் உள்ளதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில், இதன் மதிப்பை 2 என மாற்றவும்.
அவ்வளவுதான்! இனி நீங்கள் பிழையுடன் தட்டச்சு செய்யும் பொழுது, எழுத்து பிழைகள் சிவப்பு நிறத்தில் அடிகோடிட்டு காட்டும். அதை வலது க்ளிக் செய்வதன் மூலமாக பிழையை திருத்தலாம்.

நீட்சியை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"