சிறுவனை சங்கிலியால் கட்டி பாலியல் சித்திரவதை!


பதினாறு வயதுச் சிறுவன் ஒருவரை கனடாவைச் சேர்ந்த இருவர் கட்டிப் போட்டு பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
47 வயது நிரம்பிய David James Leblanc மற்றும் 31 வயது நிரம்பிய Wayne Alan Cunningham இருவரும் சேர்ந்து 16 வயது நிரம்பிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சிறுவனை விற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர்.

ஒருநாள் இரவு தெருவில் உறங்கி கொண்டிருந்த சிறுவன், விழிந்தெழுந்த போது வானில் நபர் ஒருவருடன் தான் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தான்.

இருவாரங்களுக்கும் மேலாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளான். இதுதொடர்பாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான Lesblanc என்பவரின் குடும்பத்தினர், சரணடையுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தேடப்படும் குற்றவாளிகளான இவர்கள் பதிவு எண் FBP 233யை தாங்கிய வானில் ஒண்டோரியா நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"